ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி - பிரகாஷ் ஜவடேகர்

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-03 11:28 GMT
புதுடெல்லி,

டெல்லியில் மத்திய மந்திரி  பிரகாஷ் ஜவடேகர்  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முதலீடுகளை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க வழிகாட்டுதல்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.  முதலீடுகளை அதிகரித்து, அதன் மூலம் தொழில் வளர்ச்சி அடைவதால் வேலைவாய்ப்புகள் பெருகும்.

நாடு முழுவதும் விளைப்பொருட்களை தடையின்றி விற்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகளுக்காக 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையை சியாமா பிரசாத் முகர்ஜி அறக்கட்டளை என மறுபெயரிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் விவசாயிகளுக்கான திருத்தங்களை நாங்கள் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்