டெல்லியில் உள்ள ரெயில் பவனில் அதிகாரிக்கு கொரோனா உறுதி: பாதிப்பு 6 ஆக உயர்வு

டெல்லியில் உள்ள ரெயில் பவனில் அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அங்கு பாதிப்பு 6 ஆக உயர்ந்தது.

Update: 2020-05-31 20:45 GMT
புதுடெல்லி, 

டெல்லியில் உள்ள இந்திய ரெயில்வேயின் தலைமை அலுவலகமான ரெயில் பவனில் இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் கடைசியாக கடந்த (மே) மாதம் 22-ந் தேதி அலுவலகத்துக்கு வந்துள்ளார். இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டதால், ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை நடத்தியதில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவரோடு சேர்த்து ரெயில் பவனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. முதன் முதலாக கடந்த மாதம் 13-ந் தேதி அங்கு பணிபுரியும் குமாஸ்தா ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து 14 மற்றும் 15-ந் தேதிகளிலும், அதன்பின்னர் மற்றொரு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 26 மற்றும் 27-ந் தேதிகளிலும் ரெயில் பவன் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்