புதுடெல்லியில் தீ விபத்து: 1500 குடிசைகள் எரிந்து சாம்பல்
புதுடெல்லியில் அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 1500 குடிசைகள் எரிந்து சாமபலானது.
புதுடெல்லி:
தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ளகுடிசை பகுதியில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 12.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது இது குறித்து தகவல் அறிந்ததும்
நகரில் உள்ள 28 க்கும் மேற்பட்டதீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு சென்றுதீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அதிகாலை 3:40 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் சுமார் 1500 குடிசைகள் எரிந்து சாமபலாகின. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உள்ளனர். அரசாங்கம் சார்பில் தற்போது இழப்பு மதிப்பிடப்படுகிறது.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திர பிரசாத் மீனா கூறும்போது துக்ளகாபாத்தில் உள்ள சேரிகளில் அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. அனைத்து காவல்துறை ஊழியர்களும் உடனடியாக இங்கு வந்தனர். சுமார் 1,000-1,200 குடிசைகள் தீயில் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.இது ஒரு பெரிய தீ என்பதால் இழப்பை தற்போது சரிபார்க்க முடியாது என்று கூறினார்.