மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளிகளாக பதிவு
மணிப்பூரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது.
இம்பாலா,
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் மணிப்பூரை இரவு 8.12 மணிக்கு தாக்கியது. நிலநடுக்கம் மணிப்பூரில் மையம் கொண்டாலும், நிலநடுக்க பாதிப்புகள் அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகலாந்து உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள் முழுவதும் உணரப்பட்டது.
மணிப்பூரின் தென்மேற்கே உள்ள காக்கிங்கிலிருந்து 11 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.