மேற்கு வங்காளத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-24 16:37 GMT
கொல்கத்தா,

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய மந்திரி அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விமான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.

இந்நிலையில்  மேற்கு வங்க மாநிலத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  மே 28 முதல் விமான சேவையை அனுமதிக்கலாம் என மேற்கு வங்க அரசு கூறிய ஆலோசனையை ஏற்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்காளத்தில் ஆம்பன் புயல் காரணமாக விமான நிலையங்கள் பெரும் அளவு பாதிப்பதை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்