மராட்டியத்தில் மேலும் 2,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் மேலும் 2,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-05-23 15:45 GMT
மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. நேற்று வரை மட்டும் மராட்டியத்தில்  மொத்தம், 44,582 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனாவுக்கு  1517 பேர் உயிரிழந்துள்ளனர்.  பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11726- ஆக உள்ளது. 

இந்நிலையில் மராட்டியத்தில் மேலும் 2,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,582 லிருந்து 47910 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியனவர்களின் எண்ணிக்கை 1517 லிருந்து 1577 ஆக உயர்ந்துள்ளது. இன்று 821 குணமடைந்து உள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 13404 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்