டிக்கெட் முன்பதிவு, கவுன்ட்டர்களில் டிக்கெட் வாங்கலாம் - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு

நாளை முதல் (22-ம் தேதி) கவுன்ட்டர்களில், டிக்கெட்முன்பதிவு செய்யலாம், கவுன்ட்டர்களில் டிக்கெட் வாங்கலாம் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Update: 2020-05-21 17:25 GMT
புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால், ரெயில், பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரெயில்களை நாடு முழுவதும் ரெயில்வே இயக்கி வருகிறது.

இந்த நிலையில்,  ஜூன் ஒன்றாம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அண்மையில் தெரிவித்தார்.  அதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரெயில்களை நாடு முழுவதும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று ரெயில்வே அறிவித்து இருந்தது.

இந்நிலையில், ரெயில்நிலைய கவுண்டர்களில் நாளை முதல் முன்பதிவு செய்யலாம் எனவும், நாளை முதல் கவுன்ட்டர்களில் டிக்கெட் வாங்கலாம் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ரெயில்நிலைய கவுன்டர்களில் நாளை (22ம் தேதி ) முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளை முறையாக சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த முன்பதிவு சேவை நாளை முதல் தொடங்கும். ரெயில்நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் நாளை முதல் டிக்கெட் வாங்கலாம். 

திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மட்டும் குறைந்தபட்சம் 2 கவுன்டர்கள் கொண்டு செயல்படும் . என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்