புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க மே 22ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம்: சோனியா காந்தி அழைப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க மே 22ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2020-05-19 17:38 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து விவாதிக்க மே 22ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை வகிக்கிறார். பிற்பகல் 3 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்கண்ட் முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியில் இருந்து தேஜஸ்வி யாதவ் உள்பட 20 கட்சிகளிலிருந்து தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் செய்திகள்