கொரோனா வைரசுக்கு மத்தியில் மக்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

கொரோனாவுக்கு மத்தியில் வாழ மக்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-19 02:52 GMT
புதுடெல்லி,

கொரோனாவுக்கு மத்தியில் வாழ மக்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று  துணை ஜனாதிபதி  வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், இப்போது கிடைத்த படிப்பினைகளின் அடிப்படையில் புதிய வழிமுறைகளை வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் வெங்கையா  நாயுடு  கூறியிருப்பதாவது:- நாம் தனிமையிலேயே வாழ முடியாது என்பதையும், மனிதர்களுக்கு இடையேயான தொடர்புகளின் முக்கியத்துவத்தையும் கொரோனா நோய்த்தொற்று உணர்த்தியுள்ளது.

கொரோனாவுக்கு முந்தைய காலத்தில், பொருளையும் மகிழ்ச்சியையும் தேடி மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர். இதனால், குடும்பமாக நேரத்தை செலவிடுவது குறைவாக இருந்தது.  ஆனால், கொரோனாவுக்கு பிறகு வாழ்வின் அடிப்படைகளே மாறியுள்ளன. இயற்கையுடனும், சக மனிதர்களுடனும் இணக்கமாக வாழ வேண்டியதன் அவசியத்தை கொரோனா சூழல் உணர்த்தியுள்ளது. மனிதர்களின் வாழ்க்கை வெகு எளிதாக மாற்றமடையும் என்பதை கண்ணுக்கு புலப்படாத வைரஸ் நிரூபித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்