எம்.எல்.சி.யாக உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்வு
மாராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எம்.எல்.சி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் 9 எம்.எல்.சி.களின் பதவிக்காலம் கடந்த 24-ந் தேதியுடன் முடிவடைந்தது. கொரோனா பிரச்சினையால் தள்ளிவைக்கப்பட்டது. எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக இல்லாத முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தனது பதவியை தக்க வைத்து கொள்வதற்கான தேர்தல் இதுவென்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது..
இந்த சூழலில் மாநில கவர்னர் கேஷ்யாரி மாநிலத்தில் மேலவை தேர்தல் நடப்பதற்கான சூழ்நிலை உள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார் தொடர்ந்து பிரதமர் மோடியும் தேர்தல் கமிஷனிடம் தேர்தலை விரைவில் நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.
உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் காலியாக உள்ள ஒன்பது இடங்களுக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர் பா.ஜ., தேசியவாத காங்., கட்சியை சேர்ந்தோர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இறுதியில் உத்தவ் உட்பட ஒன்பது பேர் களத்தில் நின்றனர். பின்னர் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மராட்டிய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே எம்.எல்.சி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவர் முதல்-மந்திரியாக தொடர்வதில் ஏற்பட்ட சிக்கல் நீங்கி உள்ளது.