டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,470 ஆக உயர்வு

டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8470 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-14 10:31 GMT
புதுடெல்லி,

டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,470 ஆக உயர்ந்துள்ளது.  டெல்லியில் இதற்கு முன்பு, கடந்த 7 ஆம் தேதி 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதே, ஒரே நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. 

 டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்