கொரோனா பாதிப்பு: ராணுவ வீரர் தற்கொலை

கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உறுதியானதால் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-05-13 03:23 GMT
புதுடெல்லி

31 வயது ராணுவ வீரர் ஒருவர் நுரையீரல் புற்றுநோய்க்கு டெல்லி தவுலா குவானில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை (ஆர்ஆர்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பதை தொடர்ந்து  அவர் டெல்லியின் நரைனாவில் உள்ள ராணுவத்தின் அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றபட்டார். 

கொரோனா சோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் மருத்துவமனையில் ஒரு மரத்தில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவரது உடல்நிலை குறித்த மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாங்கள் உணர்கிறோம் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராணுவ வீரர் மராட்டியத்தை சேர்ந்தவர், ஆனால் அவரது குடும்பம் ராஜஸ்தானின் ஆல்வாரில் வசிக்கிறது, அங்கு அவர் புற்றுநோய் சிகிச்சைக்காக ஆர்.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை சிக்னல்மேனாக பணியாற்றி வந்தார்.

மேலும் செய்திகள்