சொந்த மாநிலத்துக்கு திரும்பிச் செல்ல சாகச பயணத்தில் ஈடுபடும் மக்கள்
சொந்த மாநிலத்துக்கு திரும்பிச் செல்ல சாகச பயணத்தில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
ராய்ப்பூர்
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிய லாரி ஒன்று சென்றது. சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூருக்கு லாரி வந்தபோது, அங்கிருந்த நபர் சின்னஞ்சிறிய குழந்தையை ஒருகையில் தூக்கியபடி ஏறினார். அதேபோல் ஒரு நடுத்தர வயது பெண்ணும் மிகவும் சிரமத்துடன் லாரியில் ஏறினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இக்காட்சியானது வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்பிச் செல்ல எத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்பதை விளக்கும் வகையில் இருந்தது. இக்காட்சியை அங்கிருந்த ஒருவர் புகைப்படமாக எடுத்து வெளியிடவே வைரலாகி வருகிறது.