நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி
நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடலில் அந்த தொற்றினை அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும். அவர்களது ரத்தத்தில் இருந்து எதிரணுக்களை பிரித் தெடுத்து,நோயாளிகளின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிளாஸ்மா என்றழைக்கப்படும் இந்த சிகிச்சை முறை நல்ல பலன் அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் தெரிவித்து இருந்தனர்.
எனினும், பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முறையாக அனுமதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.