இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக 821 மருத்துவமனைகள் -சுகாதாரத்துறை அமைச்சர்

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக 821 மருத்துவமனைகள் அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

Update: 2020-05-08 09:30 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ்  பரவல் வேகமெடுத்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  56342 ஆக உயர்ந்துள்ளது. 16540 -பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நிலையில்,  1886- பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.  

இந்த சூழலில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கென 821 மருத்துவ மனைகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தும் வசதி மற்றும் ஐசியூ வசதியுடன் கூடிய  1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 

இன்றைய தேதி வரை நாடு முழுவதும் 14.40 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது,  95 ஆயிரம் பரிசோதனைகளை தினந்தோறும் நாம் மேற்கொண்டு வருகிறோம். நாடு முழுவதும்  கொரோனா பரிசோதனை செய்யும் வசதியுடன் 121  தனியார் ஆய்வகங்கள் 332 அரசு ஆய்வகங்கள் என மொத்தம் 453 ஆய்வகங்கள் உள்ளன” என்றார்.

மேலும் செய்திகள்