சென்னை உள்பட 8 நகரங்களில் மட்டும் 56.5 சதவீதம் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் உள்ள மொத்த கொரோனா பாதிப்புகளில் சென்னை மற்றும் 8 நகரங்களில் மட்டும் 58 சதவீதம் கொரோனா பாதிப்பு

Update: 2020-05-07 12:35 GMT
புதுடெல்லி

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 1783 ஐ எட்டியுள்ளது, நாட்டில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 24 மணி நேரத்தில் 3561 புதிய பாதிப்புகள் மற்றும் 89 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா பாதிப்புகளின்  எண்ணிக்கை 35,902 ஆக உள்ளது, அதே நேரத்தில் 15,266 பேர் குணமாகி  வீடு திரும்பி உள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில்  617 இறப்பு மற்றும் 16,758 பாதிப்புகளுடன்  மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் முதல் இடத்தில் உள்ளது. மாநிலத்தில் 3094 பேர் குணப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் மட்டும் 412 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்புகள் 10,714 ஆக உயர்ந்துள்ளன.

பாதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் இறப்பு இரண்டின் அடிப்படையில் குஜராத் மராட்டிய மாநிலத்திற்கு அடுத்து உள்ளது. மாநில சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின் படி , 6,625 பேர் வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, 396 பேர் இந்த நோயால் மரணமடைந்து உள்ளனர்

டெல்லியில்  65 இறப்புகளுடன் 5,532 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஆந்திராவில் 56 புதிய பாதிப்புகளுடன்  மொத்தம் 1,833 ஆக உள்ளன. 38 இறப்புகள் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளில்  56.5 சதவீதம் கீழ் கண்ட 8 நகரங்களில்பதிவாகி உள்ளது.

மும்பை: 20%
டெல்லி: 11%
அகமதாபாத்: 9%
புனே: 4%
சென்னை: 4%
இந்தூர்: 3%
தானே: 3% (தோராயமாக)
ஜெய்ப்பூர்: 2.5%

மேலும் செய்திகள்