இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2020-04-11 03:57 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 40 பேர் பலியாகி உள்ளனர்.

இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,447 ஆக உயர்ந்து உள்ளது.  இவர்களில் 6,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  643 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  கொரோனா பாதிப்புக்கு நேற்று வரை 199 பேர் பலியாகி இருந்தனர்.  இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 239 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்