இயேசு கிறிஸ்துவின் தைரியமும், நீதியும் தனித்து நிற்பவை; பிரதமர் மோடி
இயேசு கிறிஸ்துவின் தைரியமும், நீதியும் தனித்து நிற்பவை என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ள செய்தியில், இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது தைரியமும், நீதியும் தனித்து நிற்பவை. அவரது நேர்மையுணர்வும் தனித்தன்மை வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புனித வெள்ளி தினத்தில் இயேசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை மற்றும் நீதிக்கான அவரது உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்வோம் என கேட்டு கொண்டுள்ளார்.