கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 320 ஆக உயர்வு

கொரோனா பாதிப்புக்கு உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 70 ஆயிரத்து 320 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-04-06 12:35 GMT
புதுடெல்லி,

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 84 ஆயிரத்து 665 ஆக உள்ளது.  இதுவரை 2 லட்சத்து 71 ஆயிரத்து 721 பேர் நோய் பாதிப்பு நீங்கி சென்றுள்ளனர்.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 42 ஆயிரத்து 624 ஆக உள்ளது.

அவர்களில் குறைந்த அளவு பாதிப்பு தன்மையுடன் 8 லட்சத்து 96 ஆயிரத்து 634 பேரும் (95 சதவீதம்), தீவிர பாதிப்பில் 45 ஆயிரத்து 990 பேரும் (5 சதவீதம்) உள்ளனர்.

அமெரிக்காவில் அதிக அளவாக 3 லட்சத்து 36 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  ஸ்பெயின் (1,35,032) 2வது இடத்திலும், இத்தாலி (1,28,948) 3வது இடத்திலும், ஜெர்மனி (1,00,132) 4வது இடத்திலும், பிரான்ஸ் (92,839) 5வது இடத்திலும் உள்ளன.

இதேபோன்று பலி எண்ணிக்கையில் இத்தாலி அதிக அளவாக 15 ஆயிரத்து 887 பேருடன் முதல் இடத்தில் உள்ளது.  ஸ்பெயின் (13,055) 2வது இடத்திலும், அமெரிக்கா (9,620) 3வது இடத்திலும், பிரான்ஸ் (8,078) 4வது இடத்திலும், இங்கிலாந்து (4,934) 5வது இடத்திலும், ஈரான் (3,739) 6வது இடத்திலும் உள்ளன.

சீனாவில் 81,708 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  நேற்று பலி எண்ணிக்கை 3,329 ஆக இருந்த நிலையில் இன்று 3,331 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்