ஜம்மு காஷ்மீரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

ஜம்மு காஷ்மீரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-03-13 15:59 GMT
ஜம்மு,

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  82 ஆக அதிகரித்து உள்ளது.  65 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் என 81 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தீவிரமான தடுப்பு வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்து வருகிறது.

இந்நிலையில்  ஜம்மு காஷ்மீரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,  ஏற்கனவே உறுதி செய்யப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவருக்கும் கொரோனா தொற்றி உள்ளதாக ஜம்மு-காஷ்மீர் மாநில என்.எச்.எம் இயக்குனர் பூபிந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரை தொடர்ந்து கேரளாவில்  மேலும்  3 பேருக்கு  கொரோனா தாக்கியுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தம் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 19 பேர்களில் 3 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்