முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறிய ஈரானுக்கு இந்தியா கண்டனம்

டெல்லி கலவரம், முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறிய ஈரானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-03-03 11:10 GMT
புதுடெல்லி

டெல்லி கலவரம் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்  என்று  சர்ச்சைக்குரிய வகையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷெரீஃப் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள ஈரான் தூதர் அலி செகனி  இன்று வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு இந்தியா சார்பில்  கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது டெல்லி கலவரம் போன்றவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று அவரிடம் எடுத்துரைத்த வெளியுறவுத் துறை அதிகாரிகள், ஈரான் அமைச்சரிடம் இருந்து இத்தகைய விமர்சனங்களை இந்தியா எதிர்பார்க்கவில்லை என்று கண்டிப்புடன் கூறினர்.



மேலும் செய்திகள்