சோர்வடைந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை சமர்ப்பித்தார்
சோர்வடைந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க முடியாமல் சமர்ப்பித்தார்.
புதுடெல்லி
பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணி நேரமாக வாசித்த நிர்மலா சீதாராமன். தொடர்ச்சியாக உரையாற்றியதால் சோர்வடைந்து காணப்பட்டார். தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசிக்க முடியாமல் திணறினார். சோர்வடைந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க முடியாமல் சமர்ப்பித்தார்.
அவரது இரத்த அழுத்தம் குறைந்து விட்டதாகவும், அவர் உட்கார அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு சாக்லேட் வழங்க சக ஊழியர்கள் முன்வந்தனர்.
மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் அவருக்கு தண்ணீர் கொடுத்தார். இன்னும் 2 பக்கங்களே இருந்தன.
60 வயதான நிர்மலா கடந்த ஆண்டு, இரண்டு மணி நேரம், 17 நிமிடங்கள் பேசினார். இந்த ஆண்டு, அவரது பட்ஜெட் உரை இரண்டு மணி 45 நிமிடங்கள் நீடித்தது. அவரது சாதனையை அவரே முறியடித்தார்.
நிர்மலா சீதாராமன் நீண்ட பட்ஜெட் உரையில் காஷ்மீர் மொழி வசனம் மற்றும் தமிழ் கவிதைகளும் இடம்பெற்றன.
முன்னாள் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் அதிகப்படியாக உரையாற்றி இருந்தார். நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு கூடுதலாக 2 நிமிடங்கள் பேசி அந்த சாதனையை முறியடித்து இருந்தார்.
2014 ஆம் ஆண்டில், அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பட்ஜெட் உரை இரண்டு மணி 10 நிமிடங்கள் நீடித்தது.
முன்னாள் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கின் 1991 ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையும் மிக நீண்டது.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை சமர்ப்பித்ததும் லோக்சபா அமர்வு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.