ராஜஸ்தானில் அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம்: பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு

ராஜஸ்தானின் அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2020-01-04 11:15 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் கோட்டா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஜே.கே. லான் என்ற அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.  

குழந்தைகள் அடுத்தடுத்து பலியானதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய குழு கோட்டாவில் உள்ள ஜே.கே. லான் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளது.

இதனிடையே பண்டி பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. நேற்று  மாவட்ட துணை  கலெக்டர் அந்த மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வின் போது இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதையடுத்து குழந்தைகள் இறப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்