சி.ஏ.ஏ. அல்லது என்.ஆர்.சி. பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது; வறுமை தான் எங்களது மிகப்பெரிய எதிரி

சி.ஏ.ஏ. அல்லது என்.ஆர்.சி. பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது... அது என்ன?... வறுமை தான் எங்களது மிகப்பெரிய எதிரி என்று உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் கூறியுள்ளார்.

Update: 2020-01-01 06:23 GMT
வாரணாசி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு வன்முறையில் இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். 

"3.5 லட்சம் மக்கள்தொகை கொண்ட வாரணாசி நகரத்தில், முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த மிகப்பெரிய பகுதி பஜார்டிஹா. டிசம்பர் 20 ம் தேதி வாரணாசியில் முஸ்லிம் ஆதிக்கம் அதிகம் உள்ள பஜார்டிஹா பகுதியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவு ஆகியவற்றை கண்டித்து  மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது  போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் நெரிசலில்  சிக்கி ஷகீர் அகமது என்ற 11 வயது சிறுவன்  உயிர் இழந்தான். 

டிசம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு  பிறகு உள்ளூர் மசூதியில் இருந்து  அங்குள்ளவர்கள் திரும்பிக்கொண்டு இருந்த போது  இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சம்பவம் நடந்த  அன்று, வகீல் அகமது (இறந்தவரின் தந்தை) தனது 11 வயது இரண்டாவது மகன் ஷகீர் அகமதுவுடன் சமையல்காரராக வேலைக்குச் சென்று இருந்தார். ஷகீர் அகமதுவின் தந்தை வகீல் அகமது ஒரு ஏழை.  ஷகீர் அகமது இறந்து 10 நாட்களுக்குப் பிறகுதான், ஏழைக் குடும்பம் சோகத்தை உணர்ந்திருக்கிறது. 

இந்நிலையில், "சி.ஏ.ஏ. அல்லது என்.ஆர்.சி. பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது ... அது என்ன? ... வறுமை தான் எங்களது மிகப்பெரிய எதிரி" என்று ஷகீர் அகமதுவின் தாத்தா முக்தர் அகமது கூறி உள்ளார்.

பஜார்டிஹா பகதியில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் நெசவாளர்களாக அல்லது சமையல்காரர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். குறிப்பாக இந்த இரட்டை பிரச்சினைகள் எழுப்பப்பட்ட பின்னர் நகரத்தில் நடமாட ஒரு பயம் இருப்பதாக அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்