நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கை பல்கலைக்கழகம்: உத்தரபிரதேசத்தில் உருவாகிறது

உத்தரபிரதேசத்தில் நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கை பல்கலைக்கழகம் உருவாகிறது.

Update: 2019-12-25 21:30 GMT
கோரக்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பசில்நகர் மண்டலத்தில், நாட்டின் முதலாவது திருநங்கை பல்கலைக்கழகம் உருவாகிறது. அகில இந்திய திருநங்கை கல்வி சேவை அறக்கட்டளை என்ற அமைப்பு இதை கட்டி வருகிறது.

இங்கு திருநங்கைகள், முதலாம் வகுப்பில் இருந்து முதுகலை பட்டப்படிப்புவரை படிக்கலாம். ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பிஎச்.டி. பட்டமும் பெறலாம் என்று அறக்கட்டளையின் தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா தெரிவித்தார்.

ஜனவரி 15-ந்தேதி, 2 குழந்தைகளுடன் முதலாம் வகுப்பு தொடங்கும் என்றும், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இதர வகுப்புகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்