பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் ரூ.15 கோடிக்கு ஏலம்

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் ரூ.15 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.

Update: 2019-12-10 19:41 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திரமோடி வெளிநாட்டு பயணம் செல்கின்றபோது அவருக்கு நினைவுபரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. அதன் மூலம் ரூ.15 கோடியே 13 லட்சம் கிடைத்துள்ளது.

மேற்கண்ட தகவலை நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது கலாசாரத்துறை மந்திரி பிரகலாத் படேல் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “பரிசு பொருட்கள் மூலம் கிடைத்த பணத்தை கங்கை நதியை புனிதப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்பட்டது” என்றும் சொன்னார்.

மேலும் செய்திகள்