குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் 11 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2019-12-10 02:04 GMT
கவுகாத்தி,

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களை தாங்க முடியாமல், இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உருவாக்கி உள்ளது.

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த எதிர்ப்பை மீறி, நேற்று நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை தாக்கல் செய்தார்.  9 மணி நேர நீண்ட விவாதத்துக்குப்பின்,  மக்களவையில் இந்த மசோதா  நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பி.,க்கள் வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிராக 80  உறுப்பினர்கள் வாக்களித்தனர். 

முழு அடைப்பு போராட்டம்

இந்த நிலையில்,  குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில்  இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூா், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் அமைப்புகள் இணைந்து  இன்று 11 மணி நேரம் முழுஅடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்து இருந்தன. இதன்படி, இன்று காலை 5 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் துவங்கியது.

நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியினா் திருவிழா நடைபெற்று வருவதால், அங்கு மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  முழு அடைப்பு காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்