கர்நாடகத்தில் இடைத்தேர்தல்: 15 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு
கர்நாடகத்தில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடைபெறுகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்த இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா அரசு பெரும்பான்மை பலத்தை பெற இன்னும் 6 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.