ரேபரேலி பெண் எம்.எல்.ஏ. திருமணம்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேபரேலி தொகுதி எம்.எல்.ஏ. அதிதி சிங் மற்றொரு எம்.எல்.ஏ.வை கரம் பிடிக்கிறார்.

Update: 2019-11-17 05:53 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. அதிதி சிங். இவர், அதே தொகுதியில் 5 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்த அகிலேஷ் பிரதாப்சிங்கின் மகள் ஆவார். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் 90 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவருக்கும், பஞ்சாப் மாநிலம் நவான்ஷேஹர் எம்.எல்.ஏ. அங்காட் சைனிக்கும் டெல்லியில் வருகிற 21-ந் தேதி திருமணம் நடக்கிறது. அகிலேஷ் பிரதாப்சிங் முன்னிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அகிலேஷ் பிரதாப்சிங் சமீபத்தில் மரணமடைந்த நிலையில், இந்த திருமணம் நடக்க உள்ளது. எனவே, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மட்டும் பங்கேற்க எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதிதி சிங், காங்கிரஸ் கொறடா உத்தரவை மீறி, கடந்த அக்டோபர் 2-ந் தேதி நடந்த உத்தரபிரதேச சட்டசபை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டதால், கட்சியால் நோட்டீஸ் அனுப்பப்பட்டவர் ஆவார். அதற்கு அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை.

மேலும் செய்திகள்