ராஜ்தானி, சதாப்தி அதிவேக ரெயில்களில் உணவுப் பொருட்கள் விலை உயருகிறது
ராஜ்தானி, சதாப்தி அதிவேக ரெயில்களில் உணவுப் பொருட்கள் விலை உயர உள்ளது.
புதுடெல்லி,
ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற அதிவேக ரெயில் களில் பயணிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் விலையை அதிகரிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்து உள்ளது. அதன்படி ‘குளு,குளு’ வசதி கொண்ட முதல் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு டீ ஒரு கப் ரூ.6 உயர்த்தி ரூ.35-க்கும், காலை உணவு ரூ.7 உயர்த்தி ரூ.140-க்கும், மதியமும், இரவும் வழங்கப்படும் உணவு ரூ.15 அதிகரித்து ரூ.245-க்கும் கிடைக்கும். மேலும் 2 மற்றும் 3-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ‘குளுகுளு’ வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கும், இருக்கை வசதி கொண்ட (‘சேர்கேர்’) பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கும் டீ ரூ.5 அதிகரித்து ரூ.20-க்கும், காலை உணவு ரூ.8 உயர்த்தி ரூ.105-க்கும், மதியமும், இரவும் வழங்கப்படும் உணவு ரூ.10 அதிகப்படுத்தி ரூ.185-க்கும் கிடைக்கும்.
இதுதவிர அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப சுவையுடன் கூடிய நொறுக்கு தின்பண்டங்கள் வழங்கவும் ரெயில்வே வாரியம் முடிவு செய்து இருக்கிறது.