எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் - இன்று விசாரணை நடக்கிறது
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் குறித்த எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை இன்று நடக்கிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு இரு கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக அக்கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் ‘ரிட்’ மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீது விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உப்பள்ளியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, ‘தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் தியாகத்தால் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. அதனால் அவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும்” என்றார்.
இதுதொடர்பான ஆடியோ சமீபத்தில் வெளியாகி புயலை கிளப்பியுள்ளது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோ பதிவை தாக்கல் செய்தார். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு இந்த ஆடியோவை ஆதாரமாக கருத வேண்டும் என்று கோரினார். இதன் மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்க உள்ளது.