ஆல்கஹால் பரிசோதனையில் சிக்கிய விமான நிறுவன ஊழியர்கள் 13 பேர் பணியிடை நீக்கம்

ஆல்கஹால் பரிசோதனையில் சிக்கிய விமான நிறுவன ஊழியர்கள் 13 பேர் 3 மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-10-28 11:59 GMT
புதுடெல்லி,

விமான போக்குவரத்து ஜெனரல் இயக்குனரகம் கடந்த செப்டம்பர் 16ந்தேதி, விமான பராமரிப்பு மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு போன்றவற்றை கையாளும் ஊழியர்கள் உள்பட அனைத்து விமான நிலையங்களில் பணியாற்றும் விமான பிரிவு ஊழியர்களுக்கு ஆல்கஹால் பரிசோதனை நடத்த விதிகளை பிறப்பித்து உத்தரவிட்டது.

இதன்படி நடந்த பரிசோதனையில் இண்டிகோ விமான நிலையத்தின் 7 ஊழியர்கள், கோ ஏர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிலையத்தின் விமான பிரிவை சேர்ந்த தலா ஓர் ஊழியர் உள்பட 13 ஊழியர்கள் மதுபானம் அருந்தி இருந்தது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து அவர்களை 3 மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்து விமான போக்குவரத்து ஜெனரல் இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்