டெல்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: எச்சரிக்கும் உளவுத்துறை

டெல்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-10-23 17:30 GMT
புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. முன்னதாக, காஷ்மீருக்‍கு சிறப்பு அந்தஸ்து அளிக்‍கும் சட்டப்பிரிவு 370வது ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத் உத் தவா போன்ற பயங்கரவாத அமைப்புகள், ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த மாதம், ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்த தீவிரவாதிகள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்