பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ள டெல்லி 7 லோக் கல்யாண் மார்கில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் மற்றும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மற்றும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.