உத்தரபிரதேசத்தில் இந்து மகா சபை தலைவர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் இந்து மகா சபை தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்து மகா சபை தலைவர் கமலேஷ் திவாரியின் அலுவலகம் உள்ளது. இங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த கமலேஷ் திவாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
லக்னோவில் இந்து மகா சபை தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.