தேசிய மருத்துவ ஆணையத்துக்கு 25 உறுப்பினர்கள் தேர்வு - தமிழக பல்கலை. துணைவேந்தருக்கும் இடம்
தேசிய மருத்துவ ஆணையத்துக்கு 25 உறுப்பினர்கள் தேர்வில், தமிழக பல்கலை. துணைவேந்தருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஊழல் புகாரில் சிக்கிய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி சட்ட வடிவம் பெற்று விட்டது. இதையடுத்து, புதிதாக அமைய உள்ள தேசிய மருத்துவ ஆணையத்துக்கு 25 உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணி நேற்று டெல்லியில் நடைபெற்றது.
மாநில அரசுகள், மாநில மருத்துவ கவுன்சில்கள் அனுப்பி வைத்த பரிந்துரை பட்டியலில் இருந்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி, வீடியோ படம் எடுக்கப்பட்டது.
அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தமிழ்நாடு, ஆந்திரா உள்பட 10 மாநிலங்களைச் சேர்ந்த துணைவேந்தர்கள் 10 பேரும், மாநில மருத்துவ கவுன்சில்களின் பிரதிநிதிகள் 9 பேரும், 4 தன்னாட்சி வாரியங்களை சேர்ந்த 4 பேரும் அடங்குவர். இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்த்தன் நிருபர்களிடம் தெரிவித்தார். இவர்கள் 25 பேரும் பகுதிநேர உறுப்பினர்கள் என்று அவர் கூறினார்.