கைது செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டவர்கள்
ஐ.எஸ். தொடர்புகள் இருப்பதாக இந்தியாவில் கைது செய்யப்பட்ட 127 பேரில் பெரும்பாலானோர் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்ட்டவர்கள் என தேசிய புலனாய்வு அமைப்பு இயக்குனர் கூறி உள்ளார்.
புதுடெல்லி
பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தேசிய புலனாய்வு அமைப்பு இயக்குனர் ஒய்.சி.மோடி நாடு முன் வளர்ந்து வரும் பயங்கரவாத சவால்களை கோடிட்டுக் காட்டினார்.
மேலும் அவர் பேசும்போது, வங்காள தேசத்தை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பு ஜமாத்-உல்-முஜாஹிதீன் (ஜே.எம்.பி) கேரளா, கர்நாடகா மற்றும் மாரட்டியத்தில் தனது தடங்களை விரிவுபடுத்தியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புகள் இருப்பதாக சந்தேகத்தில் இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகளால் கைது செய்யப்பட்ட 127 பேரில் பெரும்பாலானோர் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு இந்த அமைப்பில் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என கூறினார்.