பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போபால்,
உணவு மற்றும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு எதிராக மத்தியபிரதேச அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2½ மாதங்களாக நடைபெற்ற பல்வேறு சோதனைகளில் உணவு கலப்படக்காரர்கள் 31 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவர்களைத் தவிர மேலும் 87 பேர் மீது உணவு மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு உணவு பரிசோதனை ஆய்வகத்தில் மொத்தம் ஆயிரத்து 484 மாதிரி பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டதில் 681 பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டது.
உயர் அதிகாரி ஒருவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், காய்கறிகள் மற்றும் பழங்களை புதிதுபோல் பளிச்சென்று இருப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்துவதை தீவிரமாக தடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.