ஐ.ஆர்.சி.டி.சி.யின் முதலாவது ரெயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் போக்குவரத்து தொடங்கியது

ஐ.ஆர்.சி.டி.சி.யின் முதலாவது ரெயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனை உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார்.

Update: 2019-10-04 18:45 GMT
புதுடெல்லி,

ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் இயக்கப்படும் முதலாவது ரெயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு நேற்று இயக்கப்பட்டது. இதனை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார். இந்த பாதையில் இயக்கப்படும் முதலாவது வேகமான ரெயில் இதுதான். 6 மணி 15 நிமிடங்களில் இது டெல்லியை அடையும்.

இதற்கு அகில இந்திய ரெயில்வே ஊழியர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து தொடக்க நாளை கருப்பு தினம் என அறிவித்தது. காசியாபாத்தில் 200 தொழிலாளர்கள் தேஜஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். முதலாவது தனியார் ரெயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மேலும் 150 ரெயில்களை தனியாருக்கு வழங்கும் ரெயில்வே வாரியத்தின் முடிவையும் கடுமையாக எதிர்க்கிறோம். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்