பெங்களூரு மேயர்-துணை மேயர் பதவிகளை பா.ஜனதா கைப்பற்றியது
பெங்களூரு மேயர்-துணை மேயர் பதவிகளை பா.ஜனதா கைப்பற்றி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக நகர-மாநகராட்சிகள் சட்டத்தின்படி மாநகராட்சி மேயரின் பதவி காலம் ஓராண்டு மட்டுமே ஆகும். 5 ஆண்டுகளுக்கு தேர்ந்து எடுக்கப்படும் வார்டு கவுன்சிலர்கள் மூலம் ஆண்டுதோறும் தேர்தல் நடத்தப்பட்டு மேயர்-துணைமேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி மன்றத்தின் 4-வது ஆண்டு மேயராக இருந்த கங்காம்பிகேவின் பதவி காலம் கடந்த மாதத்துடன்(செப்டம்பர்) நிறைவடைந்தது.
இதையடுத்து பெங்களூரு மாநகராட்சியின் தற்போதைய மன்றத்தின் 5-வது ஆண்டு மேயரை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது.
மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் கவுதம்குமாரும், காங்கிரஸ் சார்பில் சத்யநாராயணாவும் போட்டியிட்டனர். மேயர் பதவிக்கு கவுதம்குமாருக்கு 129 ஓட்டுகளும், சத்யநாராயணாவுக்கு 112 வாக்குகளும் கிடைத்தன. பா.ஜனதா வேட்பாளரான கவுதம்குமார், 17 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதேபோல் துணை மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ராம்மோகன்ராஜ் 127 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களம் கண்ட கங்கம்மா ராஜண்ணா 116 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.