அரியானா சட்டசபை தேர்தலில் ஒலிம்பிக் வீரர் யோகேஸ்வர் தத், பபிதா போகத்துக்கு பா.ஜனதா ‘சீட்’

அரியானா சட்டசபை தேர்தலில் ஒலிம்பிக் வீரர் யோகேஸ்வர் தத், பபிதா போகத் ஆகியோருக்கு பா.ஜனதா ‘சீட்’ வழங்கி உள்ளது.

Update: 2019-09-30 22:27 GMT
புதுடெல்லி,

அரியானா மாநில சட்டசபை தேர்தல் 21-ந் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், 78 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா தலைமை நேற்று வெளியிட்டது. அதில், 9 பெண்களும், 2 முஸ்லிம்களும் இடம்பெற்றுள்ளனர். 38 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் ‘சீட்‘ வழங்கப்பட்டுள்ளது. 7 பேருக்கு ‘டிக்கெட்‘ வழங்கப்படவில்லை.

முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், கர்னால் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். சமீபத்தில், பா.ஜனதாவில் இணைந்த மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், தாத்ரி தொகுதியிலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற யோகேஸ்வர் தத், பரோடா தொகுதியிலும், இந்திய ஆக்கி முன்னாள் கேப்டன் சந்தீப் சிங், பெஹோவா தொகுதியிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்