திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை இன்று சந்திக்கிறார் சோனியா காந்தி

டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இடைக்கால காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்திக்க உள்ளனர்.

Update: 2019-09-23 03:14 GMT
புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றக் காவலை அக்டோபர் 3-ம் தேதிவரை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இடைக்கால காங்கிரசு தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்திக்கவுள்ளனர்.

மேலும் செய்திகள்