வரிச் சலுகைகள் எதிரொலி: மும்பை பங்குச்சந்தை சில நிமிடங்களில் உயர்வு..!!
வரிச் சலுகைகள் எதிரொலி : மும்பை பங்குச்சந்தை சில நிமிடங்களில் 1,300 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
மும்பை
காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கிய நிலையில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் வரி சலுகை அறிவித்த நிலையில் வர்த்தகம் ஏற்றம் கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 900, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 460 புள்ளிக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,600 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி ஏற்பட்டு உள்ளது.