காந்தி சிலையை சேதப்படுத்தியது கோழைத்தனமான செயல் - பிரியங்கா கண்டனம்

காந்தி சிலையை சேதப்படுத்தியதை கோழைத்தனமான செயல் என்று பிரியங்கா காந்தி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-14 22:23 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கூறியிருப்பதாவது:–

உத்தரபிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு அம்பேத்கரின் சிலையை சமூகவிரோதிகள் உடைத்தனர். இப்போது காந்தி சிலையை சேதப்படுத்தி உள்ளனர். பெரிய மனிதர்களின் சிலையை இருட்டை பயன்படுத்தி உடைத்தவர்கள் கோழைகள். இதுதான் உங்கள் வாழ்க்கை சாதனையா? நீங்கள் அவர்களை அவமதிக்க முயற்சிக்கிறீர்களா? இதுபோன்ற பெரிய மனிதர்களின் சிலைகளை தாக்குவதன் மூலம் நீங்கள் அவர்களது பெருமைகளில் சிறிய அளவைகூட அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்