ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னர் கல்யாண் சிங் மீண்டும் பா.ஜனதாவில் இணைந்தார்
ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னர் கல்யாண் சிங் நேற்று மீண்டும் பா.ஜனதாவில் இணைந்தார்.
லக்னோ,
பா.ஜனதாவின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கல்யாண் சிங் (வயது 87). அந்த கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தின் முதல்-மந்திரியாக 2 முறை (1991-92 மற்றும் 1997-1999) பதவி வகித்த இவர், மாநிலத்தில் பா.ஜனதாவின் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்ந்து வந்தார்.
மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியமைந்த போது, கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கினார். அவரது கவர்னர் பதவிக்காலம் கடந்த 3-ந்தேதி முடிவடைந்தது. எனவே அவர் தனது சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்துக்கு வந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று அவர் மீண்டும் பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். லக்னோவில் நடந்த இந்த இணைப்பு நிகழ்ச்சியில், கல்யாண் சிங்குக்கு, பா.ஜனதா உறுப்பினர் அட்டையை மாநில தலைவர் ஸ்வாதந்திர தியோ சிங் வழங்கி வரவேற்றார். கல்யாண் சிங் மீண்டும் பா.ஜனதாவில் இணைந்ததன் மூலம், கட்சி மேலும் வலுவடையும் என அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்யாண் சிங், ‘என் வயது ஒரு சுமையாக இருந்தாலும், கட்சித்தலைமை எனக்கு கட்டளையிடும் பணிகளை இன்னும் நிறைவேற்றுவேன். கட்சியின் ஒழுக்கமான தொண்டன் நான்’ என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் மத்திய மந்திரி சிவபிரதாப் சுக்லா, கல்யாண் சிங்கின் மகனும், எம்.பி.யுமான ரஜ்வீர் சிங், பேரனும், மாநில மந்திரியுமான சந்தீப் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உத்தரபிரதேசம் திரும்பிய கல்யாண் சிங், பேரன் சந்தீப் சிங்கின் வீட்டில் தங்கியுள்ளார். முன்னதாக அவரது வருகையை முன்னிட்டு லக்னோ முழுவதும் அவரை வரவேற்று பேனர்கள், பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பின் போது மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்த கல்யாண் சிங், மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என பா.ஜனதாவினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கல்யாண் சிங்கின் வருகை இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.