ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாடுகளுக்கு சுற்றுபயணம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்று பயணமாக நேற்று புறப்பட்டு சென்றார்.

Update: 2019-09-09 03:40 GMT
புதுடெல்லி,

ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய  3 நாடுகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக  நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) இரவு அவர் புறப்பட்டுச்சென்றார். 

தனது சுற்றுப் பயணத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அந்தந்த நாடுகளின்  தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.  மேலும், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுடனான  இருதரப்பு உறவுகளை  மேம்படுத்தவும், நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.  ஜனாதிபதியுடன் உயர் அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,  9 மற்றும் 10 ஆகிய தேதிகளில்  ஐஸ்லாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதையடுத்து சுவிட்சர்லாந்த் செல்லும் அவர் , தனது சுற்றுப்பயணத்தின் இறுதியாக 15 ம் தேதி ஸ்லோவேனியாவிற்கு செல்கிறார்.  செப்டம்பர் 17 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்புகிறார். 

மேலும் செய்திகள்