‘இந்தியாவை யாரும் தாக்கினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ - வெங்கையா நாயுடு திட்டவட்டம்
அமைதி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாலும், எங்களை (இந்தியா) யாரும் தாக்கினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூலை வரை பல்வேறு நிகழ்வுகளில் ஆற்றிய 95 உரைகளை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் 2 புத்தகங்களாக தொகுத்து உள்ளது. இந்த புத்தகங்களின் வெளியீட்டு விழா நேற்று டெல்லியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, புத்தகங்களை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனாதிபதியின் உரைகள் அனைத்தும் இந்தியாவின் நோக்கம், விருப்பம் மற்றும் பண்பாட்டை எதிரொலிக்கிறது. மேலும் புதிய இந்தியாவின் வரையறைகளை பிரதிபலிக்கிறது. இந்த புத்தகங்கள் அனைத்தும் அவரது உலகளாவிய ஞானம் மற்றும் தொலைநோக்கு பார்வையின் தொகுப்பாகும்.
ஜனாதிபதி தனது உரைகளில் ‘வாசுதேவ குடும்பகம்’ தத்துவத்தை கையாண்டு உள்ளார். அந்த அடிப்படையில்தான் இந்தியாவும் ஒட்டுமொத்த உலகையும் ஒரே குடும்பம் என நம்புகிறது. பிற நாடுகளுடன் சண்டை போடக்கூடாது என்ற தத்துவத்தை இந்தியா கையாண்டு வருகிறது. அதன்படியே எந்த ஒரு நாட்டையும் இந்தியா தாக்கியதில்லை.
சமீப காலமாக தீவிர ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. ஆனால் எந்த நாடும் எங்களை தாக்கினால், அவர்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். இதை ஆத்திரமூட்டுவோர் உள்பட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் தாவர்சந்த் கெலாட், பிரகாஷ் ஜவடேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.