“தற்போதைய சூழ்நிலையில் பொதுப்பணியில் தொடர விரும்பவில்லை” - கர்நாடகத்தில் கலெக்டர் திடீர் ராஜினாமா
தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் நேற்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போதைய சூழ்நிலையில் பொதுப்பணியில் தொடர விரும்பவில்லை என அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் கலெக்டராக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் நேற்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போதைய சூழ்நிலையில் பொதுப்பணியில் தொடர விரும்பவில்லை என அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.
கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்ட கலெக்டராக இருந்தவர் சசிகாந்த் செந்தில். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந்தேதி தட்சிணகன்னடா கலெக்டராக பொறுப்பு ஏற்றார். இவர் கலெக்டராக பதவி ஏற்ற நாளில் இருந்து பொதுமக்கள் பிரச்சினைகளை, குறைகளை தீர்ப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
இந்தநிலையில் அவர் நேற்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் அரசுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஐ.ஏ.எஸ். அதிகாரியாகிய நான் ராஜினாமா செய்கிறேன். இது முற்றிலுமாக எனது சொந்த முடிவு மட்டும் தான். நமது ஜனநாயகம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. ஆனால் அந்த கட்டமைப்பின், அடிப்படை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமரசங்கள் செய்யப்படும் இந்த கால சூழ்நிலையில், நான் பொதுப்பணியில் தொடர விரும்பவில்லை. மேலும் அவ்வாறு பணியில் தொடருவது தார்மீக ரீதியாக நியாயமற்றது.
எனவே ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து நான் விலகி இருப்பது நல்லது என்று கருதுகிறேன். இனிமேலும் இந்த பணி வழக்கமான பணியாக இருக்காது, என்பதை உணர்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்துள்ள சசிகாந்த் செந்தில் சென்னையை சேர்ந்தவர். இவர் 2009-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். குழுவை சேர்ந்தவர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மண்டல என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் (ஆகஸ்டு) மத்திய அரசு ரத்து செய்தது. இதை கண்டித்து டாட்ரா-நாகர் ஹாவேலியில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஷா பைசல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர், காஷ்மீர் மக்களுக்கு எதிரான தொடர் கொலை மற்றும் இந்திய முஸ்லிம்கள் ஒதுக்கப்படுவதை கண்டித்தும் தனது பதவியில் இருந்து விலகினார்.
அதுபோல் பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கே.அண்ணாமலை கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.