விமான நிலையத்தில் உதவியாளரை கன்னத்தில் அறைந்த சித்தராமைய்யா

சித்தராமைய்யா தன்னுடன் இருக்கும் நபர் ஒருவரை பொதுவெளியில் கன்னத்தில் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-09-04 07:04 GMT
மைசூரு,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான  சித்தராமைய்யா தனது கட்சியினருடன் மைசூர் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது நிருபர்களை  சந்தித்துவிட்டு அவர் திரும்பியபோது அருகில் இருந்தவர் சித்தராமைய்யாவிடம் ஏதோ கூறினார். இதனால் கோபமடைந்த சித்தராமைய்யா அந்த நபரின் கன்னத்தில் அறைந்தார்.

விமான நிலையத்தில் நிருபர்கள் முன்னிலையில் சித்தராமைய்யா ஒருவரின் கன்னத்தில் அறைந்த காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் சித்தராமைய்யாவின் இந்த செயலுக்கு கண்டனம்  தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்