தீயில் இருந்து 9 குழந்தைகளை சாமர்த்தியமாக காப்பாற்றிய நர்சு
நர்சு ஒருவர் 9 குழந்தைகளை சாமர்த்தியமாக தீயில் இருந்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாக்பூர்,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருக்கும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது. அங்கு உள்ள குறைமாத குழந்தைகள் பிரிவில் தீ பரவியது. அப்போது அங்கு பணியில் இருந்த நர்சு சவிதா என்பவர், சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த பிரிவில் இருந்த 9 குழந்தைகளையும் காப்பாற்றி வேறு அறைக்கு மாற்றி உள்ளார். குழந்தைகள் மாறிவிடக்கூடாது என்பதற்காக, அந்த குழந்தைகள் பற்றிய அடையாளச் சீட்டுகளையும் அவர் மறக்காமல் பத்திரப்படுத்தி இருக்கிறார். மேலும் தீ மற்ற அறைகளுக்கு பரவாமல் தடுக்க முன்யோசனையுடன் ஆக்சிஜன் மற்றும் மின்சார சாதன இணைப்புகளையும் தற்காலிகமாக துண்டித்தார். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட மின் கசிவால்தான் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்து உள்ளது. இதுபற்றி விசாரணை நடக்கிறது.